சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில், நாளை (பிப்ரவரி 21ந்தேதி) மதுரை பயணமாகிறார். அவரை வரவேற்க திமுகவினர் பலத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (பிப்.21) மதுரைக்கு பயணம் செய்ய உள்ள நிலையில், அங்கு பல்வேறு அரசு வளர்ச்சி திட்டங்களை திறந்து வைத்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதுதொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

முதல்வர் காலை 9.30 மணிக்கு சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு, காலை 10.10 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் வடயமஞ்சியில் அமைந்துள்ள எல்காட் தொழில்நுட்பப் பூங்காவுக்கு செல்கிறார். அப்போது சாலையின் இருமங்கிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்கின்றனர்.
தொடர்நது, காலை 11.35 மணிக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள பின்னாகிள் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு மையக் கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
இதையடுத்து, பகல் 12.25 மணிக்கு தமுக்கம் – நெல்பேட்டை அண்ணா சிலை வரை 1.1 கி.மீ. தொலைவில் ரூ.190.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயர்நிலைப் பாலம் திறந்து வைக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சிவகங்கையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்கள் உருவச் சிலைகளை காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
அதையடுத்து, பகல் 12.40 மணிக்கு மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை தொடங்கி வைக்கிறார்.
பிறகு வண்டியூர் பகுதிக்கு சென்று, பகல் 1.05 மணிக்கு வண்டியூர் கண்மாய் பூங்கா, அங்குரன் அறிவியல் மையம், பேரூராட்சிகளின் புதிய அலுவலகக் கட்டடம் மற்றும் 867 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
மாலை 4 மணிக்கு மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக தென் மண்டல வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து காந்தி நினைவு அருங்காட்சியகம்வில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இரவு 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
[youtube-feed feed=1]