சென்னை: பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 27ந்தேதி ராகுலுடன் ஸ்டாலினும் யாத்திரையில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் என்ற பெயரில் அகதிகள் வாக்குரிமை உள்பட சுமார் 65 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டு உள்ளனர். விடுபட்ட வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் மீண்டும் பெயரை சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ‘வாக்காளர் அதிகார் யாத்திரை’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொள்கிறார். சுமார் 13ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் அவரது யாத்திரை 16 நாட்கள் நடைபெறுகிறது. இந்த யாத்திரை கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரத்தில் தொடங்கப்பட்டது, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.இந்த யாத்திரை கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரத்தில் தொடங்கப்பட்டது, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆர்) எதிராக பொதுமக்களின் கருத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அவரது யாத்திரை நடைபெற்று வருகிறது. ராகுலுடன் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ், சிபிஐ-எம்எல்லின் தீபங்கர் பட்டாச்சார்யா மற்றும் விஐபி தலைவர் முகேஷ் சஹானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அவரது யாத்திரையை மக்கள் சாலைகளில் வரிசையாக நின்று, கொடிகளை அசைத்து, அவரை உற்சாகப்படுத்தினர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் செல்ஃபி எடுப்பதைக் காண முடிந்தது, அதே நேரத்தில் ராகுல் கூட வரவேற்பைப் பார்த்து பிரமித்துப் போனார்.
இந்த யாத்திரையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 27-ந் தேதி அன்று ராகுலின் பாத யாத்திரையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.