சென்னை: சென்னை போரூர் நான்கு முனை சந்திப்பில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

போரூர் நான்கு முனை சந்திப்பில், 12 மார்ச் 2026 அன்று, முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வெண்கலச் சிலைகள் திறக்கப்பட்டன. இந்த வரலாற்று சிறப்புமிக்க சிலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், சேகர்பாபு மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சிலை திறப்பு விழாவையொட்டி, அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும்  பரபரப்பாகக் காணப்பட்டது.

அண்ணா மற்றும் கருணாநிதியின் 7 அடி வெண்கலச் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.  இந்த சிலைகள் மதுரவாயல் தொகுதியில் அமைந்துள்ளதால், தொகுதி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சிலைகளுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]