சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அவருக்கு வேற வேலையில்லை. அதனால் தான் தினமும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்,’ என்று சாடிய முதலமைச்சர் ஸ்டாலின், அந்த கேள்விக்கு பதில் தெரிவிக்க மறத்து விட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை கண்ணகி நகரில், மாற்றுத்திறநாளிகளுக்கான ஒருங்கிணைந்த விழுந்துகள் சேவை மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து,   சென்னை எழில்நகரில் மழலையர் வகுப்புக்களை திறந்து வைத்தார். பின்னர் பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.  அதன்படி, பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என கேள்விக்கு,  எங்கள் கட்சியின் அனைத்து எம்.பி.,க்களையும் நேரில் அழைத்து, பார்லிமென்ட்டில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் பற்றி எடுத்துக் கூறியுள்ளோம் தெரிவித்தார்.

தற்போதைய மழை நிலவரம்,  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதே என்ற கேள்விக்கு,  பெரு மழையை எதிர்பார்க்கிறோமா? எதிர்பார்க்கலையா? என்பது வேறு. நாங்கள் அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்,எனக் கூறினார்.

இதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ், அதானியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார் என்று கூறியுள்ளாரே, அது உண்மை என்ற கேள்விக்கு,.  அதற்கு பதிலளிக்க மறுத்துச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பிறகு மீண்டும் திரும்பி வந்து, ‘துறை ரீதியான அமைச்சர் அதற்கு பதில் சொல்லி விட்டார். நீங்கள் டுவிஸ்ட் வைக்காதீங்க,’ எனக் கூறினார். மேலும்,   ‘ அவருக்கு வேற வேலை இல்லை. அதனால்தான் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,” என்றார்.