சென்னை:  கடந்த 2010ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரையிலான கடந்த 10 ஆண்டுகளில் செம்மொழி தமிழ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு ரூ.10 லட்சத்துடன் செம்மொழி விருதுகளை  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் 2010 முதல் 2019 வரையிலான “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளுக்கான” விருதாளர்கள் பட்டியல் கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து, அவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை  நடைபெற்ற  விழாவில்  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு  கலைஞர் கருணாநிதியின் சிறிய சிலை மற்று தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றுடன் செம்மொழி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்றவர்களின் விவரம்:

  1. 2010- முனைவர் வீ.எஸ்.இராஜம், (Former Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania).
  2. 2011 – பேராசிரியர் பொன், கோதண்டராமன் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை).
  3. 2012- பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்).
  4. 2013 – பேராசிரியர் ப. மருதநாயகம் (மேனாள்இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்,மேனாள் பதிவாளர்,புதுவைப் பல்கலைக்கழகம்).
  5. 2014 – பேராசிரியர் கு. மோகனராசு (மேனாள் பேராசிரியர்&தலைவர். திருக்குறள்ஆய்வுமையம், சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை).
  6. 2015- பேராசிரியர் மறைமலை இலக்குவனார்(மேனாள் தமிழ்ப்பேராசிரியர். மாநிலக்கல்லூரி).
  7. 2016 – பேராசிரியர் கா. ராஜன் (மேனாள் பேராசிரியர்,வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்).
  8. 2017 – பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University,Germany).
  9. 2018 கவிஞர் ஈரோடு தமிழன்பன் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை).
  10. 2019 -பேராசிரியர் கு.சிவமணி (மேனாள்முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை).