சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் 131 மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணினி வழங்கினார். மேலும் பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கு செயல்படுத்தப்பட்ட வரும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 131 மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணினி வழங்கினார்.
தொடர்ந்து, 150 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களும் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலி,ன, ஏராளமான பெண்களக்கு பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கினார்.
அத்துடன் ஓதுவார் பணிக்கு தேர்வான மாற்றுத்திறனாளி பெண்ணான பிரியவதனாவுக்கு திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையையும் வழங்கினார்.