சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 30வது நினைவுநாளை யொட்டி, திருச்சியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டான் மலர்தூவி மரியாதை செய்தார்.
முன்னாள் முதல்வர் அமரர் ராஜீவ்காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலை மற்றும் உருவப்படங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செய்யப்பட்டு வருகிறது. ராஜீவ்காந்தியின் நினைவு நாளான மே 21-ந் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்ஙகளில் கொடுஞ்செயல் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா நிலவரம் குறித்து ஆய்பு செய்ய திருச்சி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், திருச்சி ஜங்சன் ரயில் நிலைம் எதிரே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், அதன் கீழே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சிகளியைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.,
தொடர்ந்து, திருச்சியில் உள்ள டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கு மதியம் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, மாலை திருச்சி அருகே துவாக்குடி என்ஐடியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார்.