திருவள்ளூர்: திருவள்ளூரில் 20 புதிய பேருந்து சேவைகளை முதலமைச்சர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் உள்பட மாவட்ட எம்.பி., எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவு த்திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்டம் மப்பேடு கூட்டுரோடு பகுதியில் 20 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார். மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் தொடர்ச்சியாக 20 புதிய பேருந்துகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.