சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி மதிப்பில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்,
‘ திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், முதலீடுகள் தொடர்பான செயலாக்க, மாநாடு தொடங்கியது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் கெயிட்டன்ஸ் தமிழ்நாடு சார்பில் நடைபெறும் கன்வர்ஷன் கான்கிளேவ் 2026 மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக ஆட்சியில் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தது தொடர்பாக மாநாடு நடைபெறுகிறது. கிண்டியில் நடைபெறும் செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
71 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற 52 திட்டங்களை தொடக்கியும் வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்கள் மூலம் 1.78 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். செயலாக்க மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சென்னை கிண்டியில் Guidance Tamil Nadu சார்பில் நடைபெறும் “CONVERSION CONCLAVE 2026” தொடங்கி வைத்த முதலவர ஸ்டாலின், ரூ.74,267 கோடி மதிப்பில் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதன்படி, டாபர், மகேந்திரா ஆராய்ச்சி மையம், பிரிட்டானியா, லூலூ குரூப், டாடா கெமிக்கல்ஸ் ஆலை, இ மேக் அண்ட் ஜீனிஸ், கெயின்ஸ் சர்கியூட், ஜான்சன் எலக்ட்ரிக், விவிடிஎன் டெக்னாலஜி நிறுவனங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான மாடல்; மக்கள் நலனுக்கான மாடல் என்றும், எங்களின் செயலின் மூலம் பதில் சொல்லும் மாநாடுதான் செயலாக்க மாநாடு. 5 ஆண்டு கடுமையான உழைப்பு மூலம் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

இந்த மாநாட்டில் பேசிய தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “சமூக நீதி மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் அடித்தளமே எல்லார்க்கும் எல்லாம். அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்பதுதான். தமிழ்நாட்டில் எந்த ஒரு மாவட்டமும் இந்த வளர்ச்சியில் விடுபடக்கூடாது, அனைத்து மாவட்டங்களையும் கைப்பிடித்து தூக்கிவிட வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேலும் அதிகப்படுத்தி அவர்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த அரசு தீவிரமாக செயல்படுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மேற்பார்வையில் நடைபெறும் ‘நான் முதல்வன்’ திட்டம் மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். முதன்முதலில் தமிழ்நாட்டில் டைடல் பூங்காக்களை கலைஞர் உருவாக்கினார். தற்போது அதே வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சியில் 7 நியோ டைடல் பூங்காங்களை உருவக்கியுள்ளோம். மேலும் 30 தொழிற்பூங்காக்களையும் உருவாக்கியுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 36.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்களில் 867 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஒன்றிய அரசின் தரவுகளின் படி 29.63 லட்சம் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு முதலீடுகள் என்பது முக்கியமில்லை; எப்படி பட்ட வேலைவாய்ப்புகள், எவ்வளவு வேலைவாய்ப்புகள், எங்கே வேலைவாய்ப்புகள், யாருக்கான வேலைவாய்ப்புகள் என்பதே முக்கியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் உற்பத்தித் துறையும் சேவைத் துறையும் சமமாகக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். தகவல் தொழில்நுட்பத் துறை வளர வேண்டும் என்றால், நமது படித்த இளைஞர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்.எனவே அதனை நோக்கிதான் நாங்கள் பயணித்தோம்,”
இவ்வாறு தெரிவித்தா
[youtube-feed feed=1]