சென்னை: தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி பிப்ரவரி முதல்வாரத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி போன்ற அரசு தேர்வாணையங்கள். அதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாகவும், அரசு மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பயனர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரம் பேருக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.‘
குரூப்-4 மூலம் 5,307 பேர் இந்நிலையில், அனைத்து துறைகளின் செயலர்களுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் சி.சமயமூர்த்தி அனுப்பியுள்ள ஓர் உத்தரவில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு மூலமாக பல்வேறு துறைகளுக்கு 5,307 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். புதிய பணியாளர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக முதல்வர் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி ஆகிய தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வு செய் யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தயாராக வைத்திருக்குமாறு சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மற்றும் பணி நியமன அலுவலர்களுக்கு செயலர்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி மூலம் 5,307 பேர், டிஆர்பி மூலம் 1,700 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள், எம்ஆர்பி வாயிலாக ஏறத்தாழ 3 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் சென்னையில் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
[youtube-feed feed=1]