சென்னை: ஆலந்தூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினசரி பல லட்சம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தற்போது, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பச்சை, நீல வழித்தடங்களில் ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இது மக்களின் போக்குவரத்து நெரிசல் இல்லா பயணத்துக்கு வழிவகுத்து வருகிறது. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டருக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதுபோல போரூருக்கும் பூந்தமல்லிக்கும் இடையே மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சென்னை ஆலந்தூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். இணைப்பு பாலங்கள் அமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.