சென்னை: தமிழ்நாட்டின பல இடங்களில் வணிகவரித்துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்கள் மற்றும் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சங்ர மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். அதன்படி, விருதுநகர்-குடியாத்தத்தில் ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் விருதுநகர் மற்றும் குடியாத்தத்தில் 8 கோடியே 94 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், தேனியில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும் சேந்தமங்கலம் மற்றும் பள்ளியாடி ஆகிய இடங்களில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
மேலும், 7 புதிய வணிகவரி நிர்வாக கோட்டங்கள், 6 புதிய வணிகவரி நுண்ணறிவு கோட்டங்கள், 13 புதிய வணிகவரி மாவட்டங்கள் மற்றும் 2 புதிய பதிவு மாவட்டங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை: மு