சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

சென்னை கலைவாணா் அரங்கத்தில்  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அரங்க வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டு  அமைக்கப்பட்டுள்ள. என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச்சிலையை திறந்து வைத்தார்.

என்எஸ்கே சிலையானது,  ஜி.என்.செட்டி சாலை-திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் ஏற்கனவே இருந்தது. இந்த பகுதியில்  1999ம் ஆண்டு  மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலையோரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.  அது வெளியே தெரியாவாறு அமைந்ததது.

அதனால், அந்த இடத்தில் உள்ள கலைவாணரின் உருவச்சிலையை, அகற்றி பாதுகாப்பாக கலைவாணா் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்கும்படி கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினா் அரசிடம் கோரிக்கை வைத்தனா்.

இதை ஏற்று, சிலையை புதுப்பித்து சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, சென்னை கலைவாணா் அரங்க வளாகத்தில், என்எஸ்கே சிலையானது, ரூ. 50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு நிறுவப்பட்டு உள்ளது. இந்த  உருவச்சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து, கலைவாணரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன், சுவாமிநாதன், அன்பரசன், நடிகர் நாசர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

[youtube-feed feed=1]