சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை அண்ணா சாலை அருகே உள்ள செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நான்காவது சென்னை மலர் காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நான்காவது சென்னை மலர் காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி ஜனவரி 18ம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு மலர் கண்காட்சியை காண்பதற்கான கட்டணம் ரூ.25 முதல் ரூ.50 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு ரூ. 200, சிறுவர்களுக்கு ரூ.100 ஆகா நுழைவு கட்டணம் நிர்ணயம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.25 முதல் ரூ.50 வரை நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 8 ஏக்கர் பரப்பளவில் சென்னை செம்மொழி பூங்கா, 700 வகையான தாவரங்கள், பல அரிய வகை மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஊட்டியில் உள்ள பிரபல தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் 4-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி உள்ளது.
கண்காட்சியை தொடக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். செம்மொழி பூங்காவில் இன்று தொடங்கிய மலர் கண்காட்சி ஜன.18ம் தேதி வரை நடைபெறுகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிற பெட்டூனி யாக்கள் மஞ்சள் மாரி, தங்கம், ஊதா, வெள்ளை மற்றும் கிரீம் டெல்பினியம் உள்ளிட்ட 50 விதவிதமான மலர்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
தோட்டக் கலைத்துறையில் இருந்து சுமார் 30 லட்சம் மலர்கள் இக்காட்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சியில் பூக்களால் செய்யப்பட்ட முதலை, யானை, பட்டாம் பூச்சி, தொடர்வண்டி, அன்னபறவை, மிக்கி மவுஸ், படகு, கார் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும்.