சென்னை: கட்டப்பட்டுள்ள குழந்தைகள் இல்ல கட்டிடம் மற்றும் கூர்நோக்கு இல்லத்திற்கான புதிய கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இராமநாதபுரம், அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.4.79 கோடி செலவில் புதிய கட்டடம் மற்றும் கடலூர், அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.1 கோடி செலவில் முதல் தளம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.