சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று உழவர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை, சமுக நலத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், திட்டங்களை தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை சார்பில் ரூ.542 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .
அதன்படி பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகங்கள், பணிமனை கட்டடங்கள், மகளிர் விடுதிக் கட்டடம், திறன்மிகு மையங்கள் திறந்து வைத்தார். மேலும், 555.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பல்நோக்கு அரங்குகள், விடுதிகள் மற்றும் இதர கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, உழவர் நலத்துறை சார்பில் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, வேளாண்மை – உழவர் நலத் துறையின் சார்பில் 672 வேளாண் இயந்திரங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மெலும், சென்னை மற்றும் புறநகரில் ரூ.2.6 கோடியில் 16 நடமாடும் உழவர் அங்காடிகள் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார்.
மேலும் சுகாதாரத்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ கட்டிங்களையும், சுகாதால நல மையங்களையும் பயன்பாட்டுக்கு திறந்த வைத்தார்.
மேலும், சமூக நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தோழி விடுதிகள் உள்பட பல்வேறு முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார்.
[youtube-feed feed=1]