சென்னை: பழனியில் நடைபெறும் 2 நாள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முன்னதாக, மாநாடு திடலில் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழக இந்து சமயஅறநியைத்துறை சார்பில் பழனியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற வந்த நிலையில், பழனி முருகன் கோவில் உள்பட முக்கிய இடங்கள் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. மாநாட்டையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.
அதன்படி, பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.
மேலும் இந்த மாநாட்டில் தமிழ் கடவுள் முருகனின் வழிபாட்டு சிறப்பு, இலக்கிய சிறப்பு குறித்து கருத்துரங்கங்கள் நடைபெருகிறது. அத்துடன் முருகனின் புகழ் குறித்த 1,300 ஆய்வு கட்டுரைகள் அழகன் முருகன், பாதயாத்தரையும் முருகனும், நவபாஷாணத்தில் முருகன், அறுபடை வீடுகளில் அவதரித்த முருகன், தமிழும் முருகனும் உட்பட பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்படுகின்றன். மாநாட்டு மலர் வெளியிடுதல் நிகழ்ச்சியும், முருகனின் புகழ் தொண்டு ஆற்றிய16 பேருக்கு ஒரு பவுன் தங்கக் காசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
கோலாகலமாக நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு _ மின்னொளியில் ஜொலிக்கும் பழனி _ வீடியோக்கள்…