சென்னை: பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் தலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார் .

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை  வழங்கினார். மேலும்,  பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் நிவாரணம் வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் கருவிகளையும் முதல்வர் வழங்கினார்.

உழவர் நலத்துறை சார்பில் ரூ.62.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு ரூ.35 கோடியில் 3907 பவர்டில்லர்கள், 293 விசை களையெடுப்பான் கருவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ. 62.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.