சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை மாவட்ட  திமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள  1 லட்சம் கிலோ அரிசி உள்பட நிவாரண பொருட்களை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொடியசைத்து  அனுப்பி வைத்தார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில்  வழங்கப்பட்டுள்ள  நிவாரண பொருட்களுடன் லாரியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ள 1.5 லட்சம் கிலோ அரிசி மற்றும் நிவாரண பொருட்கள்  ஏற்றிய வாகனங்கள் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் அணிவகுத்து நின்ற நிலையில், அதை   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக திமுக சார்பில்  வெளியிட்டுள்ள பதிவில்,  ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசின் நிவாரணப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.  தலமைச்சர் அவர்கள் திமுக சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க அறிவுறுத்தியிருந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தின் சார்பில் மாண்புமிகு எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் 25,000 உணவுப்பொட்டலங்களை விக்கிரவாண்டி தொகுதியில் விநியோகித்துள்ளார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்கள் 1 லட்சம் கிலோ அரிசியை அனுப்பி வைத்துள்ளார். சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ள 1.5 லட்சம் கிலோ அரிசி ஏற்றிய வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.