சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலை வர்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக தொண்டர்கள், முதலமைச்சருக்கு வாழ்த்து சொல்ல அண்ணா அறிவாலயத்திலும், கருணாநிதி, அண்ணா நினைவிடம் மற்றும், அவரது ஆழ்வார் பேட்டை, கோபாலபுரம் வீடுகள் முன்பும் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்திருந்தனர்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் காலையில் இன்று காலை எழுந்ததும் வீட்டில் இருந்த கலைஞரின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு, மெரினா கடற்கரைக்கு சென்று அண்ணா, கருணாநிதி சமாதிகளில் மரியாதை செய்ததுடன், வேப்பேரி சென்று பெரியார் சமாதியிலும் மரியாதை செய்தார். பின்னர் சிஐடி காலனி சென்று, ராஜாந்தி அம்மாளிடம் ஆசி பெற்றதுடன், கனிமொழி எம்.பி.யின் வாழ்க்களை பெற்றார்.
பின்னர், ஆழ்வார்பேட்டை வீட்டு வந்தவர், தனது குடும்பத்தாருடன் ‘கேக்’ வெட்டி, குடும்பத்தினருக் கேக் ஊட்டி மகிழ்ந்தார். அவருக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை மற்றும் குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதன் பிறகு தொண்டர்களின் வாழ்த்துகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நடிகர் விஜய் உள்பட நாடு முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர்.