சென்னை: போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வணிக கப்பல்கள் மற்றும் கச்சா எண்ணை கொண்டு வரும் கப்பல்கள் செல்லும் பகுதியான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கை உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. மேலும் வணிக நிறுவனங்களுக்கான எரிவாயு சப்ளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஹோட்டல்கள் மூடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், போர் பாதிப்பு குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,
அமெரிக்கா – ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன்.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற் சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு கூறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் போர்: கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக ஜி7 நாடுகள் இன்று ஆலோசனை..!