சென்னை:
மழை பாதிப்பு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.