சென்னை:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் கடந்த 22ம் தேதி நடந்த 100வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட முயன்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,‘‘மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்கும் மதிப்பளித்து, தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முடிவு செய்துள்ளது. ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்படுவதுடன், தண்ணீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.