திருவாரூா்:
மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பாட்டி அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னா் முதல்முறையாக திருவாரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு காட்டூருக்கு செல்லும் வழியில் பிரதான சாலையில் நின்றிருந்த மக்கள் அவரை வழிமறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

தமிழக முதல்வரும் பொறுமையாக அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அவருக்கு உதவியாக பின்னால் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின் மனுக்களை மக்களிடமிருந்து வாங்கி கொடுத்தார்.

இதை தொடர்ந்து கருணாநிதியும் தாயாரும் முதல்வரின் பாட்டியுமான அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.பிறகு, அதே பகுதியில் நடைபெற்றுவரும் கலைஞா் அருங்காட்சியகக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறாா். இரவு அரசு விருந்தினா் மாளிகையில் ஓய்வெடுக்கிறாா்.
நாளை காலை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி மருத்துவப் பிரிவு வளாகத்தை திறந்துவைக்கிறாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். பின்னா், திருக்குவளைக்கு செல்லும் முதல்வா், அங்கிருந்து திருவெண்காடு சென்றுவிட்டு, மாலை சென்னை திரும்புகிறாா்.