சென்னை: அடையாறில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள நடிகர் திலகம் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய திரைத்துறை வரலாற்றில் செவாலியர் பட்டம் பெற்ற ஒரே நடிகர் சிவாஜி கணேசன். தாதா சாகெப் பால்கே விருது உள்பட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்துள்ள நடிகர் திலகத்தின் 94வது பிறந்தநாள் இன்று தமிழக அரசு மற்றும் அவரது ரசிகர்களால் இன்று உலகம் முழுவதும கொண்டாடப்படுகிறது. வாஜி கணேசனின் 94வது பிறந்தநாளான இன்று, அவரை கவுரவிக்கும் வகையில், உலகளவில் தேடுபொறியில் முன்னணி நிறுவனமாக திகழும் கூகுள், தனது இணையப்பக்கத்தில் சிவாஜி கணேசனுக்கு டூடுல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில்,, சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், மணிமண்டபத்தில் உள்ள அவரது புகைப்படங்களையும் பார்வையிட்டார்.
முதல்வர் ஸ்டாலினை, சிவாஜியின் மகன் ராம்குமார் உள்பட குடும்பத்தினர் வரவேற்றனர்.