துபாய்:
துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
துபாயில் உலக கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைகளின் சிறப்புகள் குறித்து உலக நாட்டு பிரதிநிதிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள தமிழக அரங்கை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நான்கு நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார்.
தொழில்துறை, மருத்துவம் உள்ளிட்ட முக்கியதுறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் காட்சிபடங்கள் திரையிடப்பட உள்ளன. பல்வேறு துறைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் உருவங்களும் அரங்கில் காட்சிபடுத்தப்பட உள்ளன. தமிழகத்தின் அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் பார்வையிடும் அளவிற்கு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளன.
[youtube-feed feed=1]