சென்னை: சென்னையில் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா, துணைமேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது செய்த கன மற்றும் தொடர் மழையால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து, சென்னை வெள்ளக்காடாக காட்சி அளித்தது. பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை சாலைகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவை தமிழகஅரசு அமைத்தஆய்வு செய்து அறிக்கை பெற்றது. இதையடுத்து, இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக சென்னை முழுவதும் மழைநீர் தேங்கும் இடங்களில் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல இடங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் மண்டலம், வேப்பேரி நெடுச்சாலையில் ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டதுடன்,
சென்னை வேப்பேரியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க நகர் மண்டலம் புளியந்தோப்பு நெடுச்சாலையில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும்த பார்வையிட்டார்.