சென்னை:
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு தங்க பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய விளையாட்டு வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள் என்று பதிவிட்டுள்ளார்.