சென்னை: மணமக்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும் என 9எழை ஜோடிகளுக்கு 33 சீர்வரிசை பொருட்களுடன்  திருமணம் செய்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் மற்றும் பணிகளை தொடங்கி வைக்கும் முதல்வர் இன்று காலை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

சென்னை திரு.வி.க. நகர் காமராஜர் மாநகராட்சி  திருமண மண்டபத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து  ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு சவரன் தங்க தாலி மற்றும் 33 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை முதலமைச்சர் வழங்கினார்.

திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் ஸ்டாலின், மிகவும் பாழடைந்து கிடந்த மாநகராட்சி மண்டபத்தை நான் தான் சீரமைத்தேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மண்டபம் புனரமைப்புக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை போராடி வாதாடி வென்றோம்.

மணக்களின் கோரிக்கையை ஏற்று மண்டபத்தை புதுப்பித்து காமராஜர் மண்டபம் என பெயர் வைத்தோம்.  மணமக்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும்.

இவ்வாறு கூறினார்.