சென்னை: சத்யாவுக்கு நடந்ததுபோல் இனிமேல் நடக்கக்கூடாது, சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போனேன் என்று சென்னை யில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.மேலும் தனது தொகுதியிலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று கூறினார்.
சென்னை, இராயப்பேட்டை, புதுக்கல்லூரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரு இலட்சமாவது பணிநியமன ஆணையினை மாற்றுத்திறனாளி செல்வி குஷ்பு க்கு மா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செயல்பாடுகளின் காட்சிக்கூடம் மற்றும் வேலையளிப்போர் அரங்கத்தினை பார்வையிட்டார்.
சென்னை மாநகரில் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் ராயப் பேட்டையில்உள்ள நியூ காலேஜில் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற கண்காட்சியை பார்வைட்டடார். இதைத்தொடர்ந்து சிலருக்கு வேலைவாய்ப்புக்கான பணி ஆணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை கூற கடமைப்பட்டிருக் கிறேன். வேதனையுடன் இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை நினைத்து நொறுங்கிப் போய் உள்ளேன். நான் மட்டுமல்ல இதை படித்த , அறிந்து கொண்ட அனைவரும் துக்கத்தில் தான் இருப்பீர்கள். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தின் நிகழக் கூடாது இது நாம் நினைக்கக்கூடிய சமூகம் அல்ல. இனி எந்த பெண்ணுக்கும் இதுபோன்று நடக்காத வண்ணம் தடுக்கக்கூடிய கடமை ஒரு சமூகமாக நமக்கு இருக்கிறது.
குழந்தைகள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனித்திறன் ,அறிவு, ஆற்றல், சமூகநோக்கம் கொண்ட மனப்பான்மை கொண்ட வர்களாக அவர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது . பாட புத்தக கல்வி மட்டும் அல்லாமல் சமூக கல்வியும் மிகவும் அவசியம் என்று பிள்ளைகளுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். மற்ற உயிர்களை பாதுகாக்கவும் நாம் கற்றுத் தர வேண்டும். நல்ல ஒழுக்கம் , பண்பும் கொண்டவர்களாக அவர்களை வளர்த்து இந்த சமூகத்திற்கு நாம் பங்களிப்பை தேடி தர வேண்டும். எந்த வகையிலும் அவர்கள் திசை மாறி சென்று விடாதபடி அவர்களை நாம் பொறுப்புடன் வளர்க்க வேண்டும். இந்த பொறுப்பு பெற்றோர்களிடம் உள்ளது .
இயற்கையில் ஆண்கள் வலிமையானவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த வலிமை பெண்களை மதிக்கவும், பாதுகாக்கவும் தான் தரப்பட்டுள்ளது. சில இளைஞர்கள் என்ன மாதிரியான வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
பள்ளி, கல்லூரி பெற்றோர்கள் இளைய சமூகத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களை நாம் வளர்க்க வேண்டும். அவர்களை வேலைக்கு தகுதியானவர்களாக மாற்றுவது என்ற சக்கர சுழற்சியில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து பேசியவர், ‘என் தொகுதியில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்றம், அமைச்சர் சேகர்பாபு தொகுதி யிலும் நடத்த வேண்டும் என கூறியவர், இந்த 2 தொகுதிகளில் மட்டுமல்லாமல் 234 தொகுதிகளிலும் இதுபோன்ற முகாம்களை நடத்த வேண்டும் என்பதுதான் நான் வைக்கக் கூடிய வேண்டுகோள். உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை உங்களுக்கு கிடைக்கும். அதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைக்க மட்டுமல்லாமல் ஒரு லட்சமாவது பணி ஆணையை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை விட ஓர் அரசை நடத்தும் முதல்வருக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க போகிறது.
இவ்வாறு கூறினார்.