சிவகங்கை: கீழடியில் ரூ.22 கோடி செலவில்  அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை   முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்  ன அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கைமாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் அகழ்வாராயச்சி நடைபெற்று வருகிறது.   இங்கு பண்டைய கால தமிழர்கள் உபயோகப்படுத்திய பொருட்கள் உள்பட   ஏராளமான அதிசயத்தகக பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியை பொதுமக்கள் அறியும் வகையில் திறந்து வெளி அருங்காட்சியமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து, அதற்காக 2025  ஜனவரியில் ரூ.17 கோடியே 80 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

இதைத்தொடர்ந்து  அங்கு . சுமார் 67 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு அரங்குகளாக காட்சிப்படுத்தும் பணிகள் தொடங்கின. ஏழாம்கட்ட அகழாய்வு நடந்த இடம் ஒரு அரங்கமாகவும், இரண்டு, நான்கு, ஆறாம் கட்ட அகழாய்வு நடந்த இடம் இரண்டாம் அரங்கமாகவும் மாற்றும் பணி நடந்து வந்தது. இதில் முதலாம் அரங்கம் மட்டும் திறப்பு விழாவிற்கு தயாரான நிலையில், நாளை (13-ந்தேதி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்த வெளி அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ. 22 கோடி ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைகிறது. பண்டைய கால மக்களின் வாழ்வியல் முறைகள், பணிகள், அணிகலன்கள் உள்ளிட்டவைகளை பொது மக்கள் நேரில் காண உள்ளனர். திறந்த வெளி அருங்காட்சியக பணியின் போது ரூ. 17 கோடியே 80 லட்சம் என திட்டமிடப்பட்டது. செலவீனம் அதிகரித்ததால் தற்போது ரூ. 22 கோடியாக திட்டமதிப்பீடு அதிகரித்துள்ளது.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை 31ந்தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

[youtube-feed feed=1]