சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி திமுக போட்டியிடும் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க போட்டியிடும் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஏற்கனவே  கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்ககீடுகள் முடிந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வகையில் தி.மு.க கூட்டணியில், உள்ள கட்சிகளின் தொகுதிகள் வெளியானதை அடுத்து, தி.மு.க போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக  164 தொகுதிகளில் தி.மு.க நேரடியாக களம் காண்கிறது. 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம் என கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 28) செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான 164 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ், காந்தி ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

27 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் நேரடியாக திமுகவுடன் பாஜக மோதுகிறது. நான்கு தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. திமுகவை பொறுத்தவரை 175 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. 121 தொகுதிகளில் நேரடியாக அதிமுகவுடன் மோதுகிறது.

திமுக வேட்பாளர் பட்டியலில் இளைஞர்கள், பெண்கள், பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 60-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பட்டியலில் பெண் 18 பேரும் அடங்குவர். 125 பேர் பட்டதாரிகள் ஆவர். இதில் 15 பேர் மருத்துவர்கள், 17 பொறியாளர்கள், 29 பேர் வழக்கறிஞர்கள், 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவர்.

அதன்படி 164 தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்களின் விவரங்கள் வருமாறு:-

 

[youtube-feed feed=1]