சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை இன்று வெளியிட்டார் .

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25”-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (மார்ச் 14) தொடங்குகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது அமர்வான இது பட்ஜெட் கூட்டத்தொடராக அமைந்துள்ளது. முதல்நாள் அமர்வான நாளை, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையடுத்து நாளை மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
முன்னதாக, தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. இதையடுத்து சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மாநில திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25”-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TN Assembly TN budget தமிழக சட்டசபை தமிழக பட்ஜெட்