சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள, அதாவது எ2027 ஜனவரியில் அமல்படுத்த உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் போராட்டத்தை தொடர்ந்து, திமுக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2027 ஜனவரியில் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜன. 3 அன்று அறிவித்தார். இந்த அறிவிப்பையடுத்து பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். ஆனால், சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதாவது, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக ‘தமிழ்நாடு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, ஊழியர்கள் தங்கள் அடிப்படைச் சம்பளத்தில் 10 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு பங்களிப்பார்கள், மீதமுள்ள செலவை மாநில அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்தியிருந்த ஊழியர் சங்கங்கள், தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற 23 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழ்நாடு அரசு இந்த பென்சன் திட்டத்தை அறிவித்துள்ளதை பொருளாதார ஆய்வாளர்கள், அரசியல் ஸ்டண்ட் என்று விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த புதிய பென்சன் திட்டம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளதாக கூறும் பொருளாதார வல்லுநர்கள், இந்த திட்டம் 2027 ஜனவரியில்தான் அமலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளனர். அதாவது, வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் மட்டுமே, புதிய பென்சன் திட்டம், 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வரும் நிதியாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]