சென்னை; இயற்கை வளத்தை காக்க பசுமைத் தமிழகம் (GreenTNMission) இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தவிழாவானது சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியியல் பூங்காவில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , இயற்கை வளத்தை காக்கும் வகையில், சென்னை வண்டலூரில் பூங்காவில் பசுமை தமிழகம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் வண்ணமாக வண்டலூர் பூங்காவில் முதல்வர் மகிழம் மரக்கன்றை நட்டுள்ளார்.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், மக்களின் பங்களிபோடு இயற்கை வளத்தை காக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23.8% ஆக உள்ள காடுகளின் பரப்பை, 33% ஆக அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும். இயற்கையை காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இயற்கையை காப்பாற்ற பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இயற்கையை பற்றி நமது புலவர்கள் அதிகம் எழுதியுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளா
அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 32 கொடு மரக்கன்றுகளை நாட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராமசந்திரன், தா.மொ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.