சென்னை: தூத்துக்குடியில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம்  பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.

‘அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கிராமத்தில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி, சிப்காட் தொழில் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து,   ரூ.167.9 கோடியில்  கட்டப்பட உள்ள மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து,  இராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அமைச்சர்கள் சிவசங்கர், கீதாஜீவன், மற்றும் தூத்துக்குடி எம்பி. கனிமொழி உள்பட பலர் பங்கேற்றனர்.

[youtube-feed feed=1]