சென்னை: வடசென்னையின் வளர்ச்சி திட்டத்தின்கீழ், கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை தலைமைச்செயலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் முகஸ்டாலின் காணொளி காட்சியின் மூலம் கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின்கீழ், சிவசக்தி காலனியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் 53.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்திற்கு அடிக்கல் நாட்டி, அதன் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.5.22 கோடி செலவில் முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர் பகுதியில், ரூ. 53.50 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான வண்ண மீன்கள் சந்தை அமைத்தல் பணி, ராயபுரம் மூலகொத்தலத்தில் , ரூ.14.31 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் அமைத்தல் பணி , புரசைவாக்கம் கான்ரான் ஸ்மித் சாலையில் ரூ. 11.43 கோடி மதிப்பீட்டில் நவீன சலவைக் கூடம் அமைத்தல் பணி மற்றும் ரூ. 16.96 கோடி மதிப்பீட்டில் புழல் ஏரிக்கரை மேம்படுத்துதல் பணி உள்ளிட்ட 6 திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரூ.5.22 கோடி மதிப்பீட்டில் அயனாவரம் நவீன சலவைக்கூடம் உள்ளிட்ட 4 முடிவுற்றப் பணிகளையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களும், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் தயாநிதி மாறன் எம்.பி, கலாநிதி வீராசாமி எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.