சென்னை: டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 65 பேருக்கு மீன்வளத்துறை ஆய்வாளர் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மீனவளத்துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் மீன்வளத்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.