சென்னை: உஸ்மான் சாலை -சிஐடி நகரை இணைக்கும் புதிய இரும்பு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன்மேல் நடந்து பாலத்தை ஆய்வு செய்தார்.
சென்னை அண்ணா சாலை சந்திப்பு தொடங்கி தியாகராய நகர் வடக்கு தெற்கு உஸ்மான் சாலை வரை கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இரும்பு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கடுமையான நெரிசலில் சிக்கி தவிக்கும் சென்னை திநகர் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.164 கோடியில் 1.2 கிலோ மீட்டர் நீளத்தில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இது சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள முதல் இரும்பு மேம்பாலம். இந்த பாலம் சென்னை அண்ணா சாலை சந்திப்பு தொடங்கி தியாகராய நகர் வடக்கு தெற்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் இன்று திறக்கப்பட்டது.
இந்த பாலத்திற்கான பணிகள் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பாலம், 55 தூண்களுடன், 3800 மெட்ரிக் டன் இரும்பு கொண்டு, 7.5 மீட்டர் அகலம் உடைய இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் இன்று திறக்கப்பட்டது. பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து வாகன போக்குவரத்துக்கு அனுமதித்தார்.
இந்த மேம்பாலம் வழியாக எளிதாக தி.நகரில் இருந்து சிஐடி நகர் வழியாக அண்ணாசாலையை அடைய முடியும். இதனால், சமார் 45 நிமிட பயணம் இனி வெறும் ஐந்து நிமிடத்தில் செல்ல முடியும்.

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரும்பு மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, இந்த மேம்பாலத்திற்கு மறைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 40,000 வாகனங்கள் ஜெ.அன்பழகன் மேம்பாலத்தில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.