சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் ஜி – 20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இன்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில் கூட்டம் நடைபெற உள்ளது.
ஜி20 நாடுகளுக்கு தலைமையேற்றுள்ள இந்தியா, கடந்த 1ம் தேதி ஜி – 20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அடுத்த ஜி20 மாநாடு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது. அதற்கான நடவடிக்கைளை மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, இன்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில், பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள மாநில முதல்வர்கள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள் என 40 கட்சி தலைவர்களுக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல விசிக எம்.பி. திருமாவளவனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் க விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, திருமாவளன் ஆகியோரும் டெல்லி புறப்பட்டனர்.