சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் அரசு துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நிகழ்வு கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

 சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் அனைத்த துறைச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில்,  தலைமை செயலாளர் இறையன்பு முன்னிலை வகித்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதில், நிதிநிலை அறிக்கை, திட்டங்களின் நிலை என்ன, கூடுதலாக எடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் என்ன? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.  2022- 23ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் துறைசார்ந்து எந்த நிலையில் இருக்கின்றன? அதற்கான நிதிகள் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? திட்டங்கள் சரியாக சென்று சேர்கிறதா? முடியும் தருவாயில் உள்ள திட்டங்கள் எத்தனை? உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.

மேலும்,  துறைவாரியான திட்ட பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் தலைமையிலான அனைத்துத்துறை செயலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவிருக்கிறது. மேலும் பருவமழை தொடங்கும் முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது.