தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது உடல் நலம் குறித்து வதந்தி பரவியது. இதையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோவை அதிமுக நிர்வாகி புனிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ், சுரேஷ் என்ற இரண்டு வங்கி ஊழியர்கள் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.