காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக மேட்டூர் அணையில் இருந்து 12ந்தி பாசன நீர் திறந்து விடப்படும்என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தண்ணீரை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், மேற்குதொடர்ந்து மலைப் பகுதி மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் டேமில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்வதற்கான வரும் 12ந்தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையை திறந்துவிட நேரில் செல்கிறார்.