சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக முதல்ல்வர் எடப்படி பழனிச்சாமி ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, கடந்த இரு நாட்களாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, இன்று தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினார்.
பின்னர், சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக அனைத்து பிரிவு அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்
Patrikai.com official YouTube Channel