Skip to content
  • Tue. Sep 8th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News தமிழ் நாடு

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

Jan 16, 2021

மதுரை:  தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முதல் தடுப்பூசியை அரசு மருத்துவர் செந்தில் போட்டுக்கொண்டார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று காலை பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதையடுத்து மாநிலங்களிலும், தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கி உள்ளது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில்  தொடங்கி வைத்தார்.

அதையடுத்து? தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 14 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கோவையில் 4, மதுரையில் 5, திருச்சி 5, சேலத்தில் 7 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தில் முதல் தடுப்பூசி அரசு மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது. அதனை தொடர்ந்து முன்களப் பணியாளர்களான மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு மையங்களிலும்  100 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியவர், . கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்படும் எனவும் முதல் தடுப்பூசிக்கு பிறகு 28 நாட்கள் கழித்து 2வது தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Post navigation

‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’! தடுப்பூசி திட்டத்தை தொடங்கிய பிரதமர் மோடி உரை!
கரும்புகளால் பொங்கல் பானையை உருவாக்கி அசத்திய காஞ்சிபுரம் விவசாயி

Related Post

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

தமிழ் நாடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? 25 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த TNHB, சென்னை மாநகராட்சி அனுமதி

இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

உலகம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer