சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 2வது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 11ம் தேதி முதல் தவணை கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். சேலத்தில் தங்கி இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, கடந்த 6ம் தேதி எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் வாக்களித்தார்.

இந் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று வந்தார். பின்னர் அவருக்கு 2வது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது அரசு மருத்துவமனை முதன்மையர் முருகேசன், கண்காணிப்பாளர் தனபால், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதலமைச்சருக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.