டில்லி:

நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர்  நாகேஸ்வ ராவுக்கு உச்சநீதி மன்றம்  ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, இன்று முழுவதும் நீதிமன்ற அறையின் மூலையிலேயே இருக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு  தொடர்பாக உச்சநீதி மன்றம் நியமித்த  விசாரணை அதிகாரியை சிபிஐ இடைக் கால இயக்குனராக இருந்த நாகேஸ்வரராவ் மாற்றியது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து,  விசாரணை அதிகாரி ஏ.கே சர்மாவை மாற்றியதற்கு, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில், அவரது மனிப்பை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி,  சர்மாவை அவ்வளவு அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி,  வானம் இடிந்து விழப் போகிறது என்று மாற்றினீர்களா… ஏன் அவ்வளவு அவசரம்  என கேள்வி விடுத்ததோடு,  நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு மட்டுமல்லாமல், இன்று முழுவதும் நீதிமன்ற அறையின்  ஓர் மூலையில் அமர்ந்திருக்குமாறும்  அதிரடி உத்தரவிட்டனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள  முசாபர்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் உள்ள பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படத்தியது.  இந்த கொடூர சம்பவத்தில் காப்பகத்தை நடத்திய வந்தவர் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் நண்பர் என்றும் தெரிய வந்தது.

இந்த புகார் தொடர்பாக உச்சநீதி மன்றம், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத் தோடு விசாரணை அதிகாரியாக ஏ.கே சர்மாவை நியமித்தது.

இதற்கிடையில் சிபிஐ இயக்குனர்கள் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கட்டாய விடுப்பு போன்ற காரணங்களால் நாகேஷ்வரராவ் இடைக்கால இயக்குனராக நியிமிக்கப்பட்டார். இவர் பல அதிகாரிகளை அதிரடியாக மாற்றி நடவடிக்கை எடுத்தார். அப்போது ஏ.கே.சர்மாவையும் இடம் மாற்றம் செய்தார்.

உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் விசாரணை நடந்து வரும் நிலையில், விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உச்சநீதி மன்றத்தில் நாகேஸ்வரராவ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

நேற்றைய விசாரணையின்போது, சிபிஐ கூடுதல் சட்ட ஆலோசகர் பாசுரனும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்த உச்சநீதி மன்றம், நாகேஸ்வரராவ் இன்றைய விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

இன்று வழக்கு  மீண்டும் விசாரணைக்கு எடுத்தது.  உச்சநீதி மன்றத்தின் நேற் றைய உத்தரவின் அடிப்படையில் நாகேஷ்வர ராவ் இன்று ஆஜரானார். வழக்கு விசாரணையில் “இடைக்கால இயக்குநர் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் போது உச்சநீதிமன்றத்தை ஆலோசித்திருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் இவ்விவகாரத்தில் பகிரங்க மன்னிப்பு கோருவதாக நீதிமன்ற அறையில் தெரி வித்தார்.  எனினும், அவரது மன்னிப்பை ஏற்க தலைமை நீதிபதி மறுத்து விட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.  நீதிமன்ற அவமதிப்பு நடந்திருப்பது உறுதியாகியுள்ளது என்றும், ஏ.கே சர்மாவை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமித்தும்  உத்தரவிட்டார்.

மேலும், நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, இன்று முழு வதும் நீதிமன்ற அறையின் மூலையில் அமர்ந்திருக்குமாறு உத்தரவிட்டனர்.

பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் முட்டிக்கால் போடச் சொல்வதும், பெஞ்சு மேல் நிற்க வைத்து தண்டனை கொடுப்பது போல, உச்சநீதி மன்றமும் நாகேஸ்வரராவுக்கு  வித்தியாசமான முறையில் தண்டனை வழங்கி உள்ளது.