டில்லி:

ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி  செய்யப்படுவ தாக, இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு விசாரணை குழு உத்தரவிட்டு உள்ளது.

பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள நீதிபதிகள்,  தலைமை நீதிபதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளனர்.

தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றம்சாட்டியது தொடர்பாக நீதிபதி பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மூடிய அறைக்குள் ரகசியமாக விசாரணை நடத்தியது. வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க பாலியல் புகார் அளித்த பெண்மணி  மறுத்துவிட்டார்

இநத் நிலையில்,  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டு நிராகரிப்பதாக  தெரிவித்த நீதிபதிகள் புகார் தொடர்பான மனுவை தள்ளுபடி சய்வதாக அறிவித்து உள்ளனர்.