லக்னோ:

உ.பி. மாநிலம் கோராக்பூர் இடைத்தேர்தலில் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு பூத் சிலிப் இருந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. மாநிலம் கோராக்பூர், புல்பூர் லோக்சபா தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. முதல்வர் யோகி ஆதிய்தநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரது ராஜினமா காரணமாக இத்தேர்தல் நடக்கிறது.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துவிட்டது. தற்போது வீடுவீடாக் பூத் சிலிப் வழங்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. கோராக்பூர் தொகுதியில் ஷாஜன்பா உட்கோட்ட பகுதியில் பூத் சிலிப் விநியோகம் செய்ய பூத் அலுவலர் சுனினா சவுபே கொத்து கொத்தாக பூத் சிலிப்களை பணியாளர்களிடம் வழங்கினார். அவற்றை பணியாளர்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பெயரில் பூத் சிலிப் இருந்தது கண்டுபிடிக்கப்ப்டடது. அவருக்கு வாக்காளர் எண் 822 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் 2231801 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. லூச்சி ஆரம்ப பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களிக்க வேண்டும் இருந்தது. இதை கண்டு பணியாளர்களும், வாக்காளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான ராஜீவ் ரவுத்தெலா கவனத்துக் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து விசாரணை தாசில்தார் பங்கஜ் ஸ்ரீவத்சா விசாரணை நடத்தி 2 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.