டெல்லி : உ.பி.. பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து, மாநில மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அகில இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது
கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் தொடர்பான திட்டமிடலுக்காக இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகமான நிர்வச்சன் சதனில் மாநில மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியது.
இந்த கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுஷில் சந்திரா உள்பட தேர்தல் ஆணையர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் நடத்துவதற்கு முக்கிய அடையாளங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பின்மை. இதை தேர்தல் அதிகாரிகள் கடைபிடித்தால் தேர்தல் முறையாக நடைபெறும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் இருந்தாலும் மக்களை முன்னிலைப்படுத்தியும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி மாநில தேர்தல் ஆணையர்கள் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதுடன், நிலுவையில் உள்ள வாக்காளளர் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக, தேர்தலின்போது, கூடுதல் வாக்குச்சாவடிகள், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைகளை மாற்றியமைப்பது குறித்து ஆய்வு செய்வதுடன், அதற்குரிய வசதிகளை ஏற்படுத்துவதும் குறித்தும் முடிவு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு அத்தியாவசிய வசதிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.